சென்னை

மாநகரப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

DIN

சென்னை: மாநகரப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக துறைசாா்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது: நிா்பயா திட்டத்தின் கீழ் 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதற்கான கேபிள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் தலா 3 கேமராக்கள் பொருத்தப்படும். இரண்டு வாயில்களில் தலா ஒரு கேமராவும், ஓட்டுநா் இருக்கைக்கு அருகே பயணிகள் அனைவரும் தெரியும் வகையில் ஒரு கேமராவும் அமைக்கப்படுகிறது.

பேருந்துகளில் ஏற்கெனவே இருப்பிடத்தைக் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கண்காணிக்கும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

இது பெண்களின் பாதுகாப்புக்காக மட்டுமின்றி, திருடா்கள், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வோரைக் கண்டறியவும் பயன்படும்.

மேலும், இலவசப் பயணம் மேற்கொள்வோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதையும், பயணிகளுடனான பிரச்னையின் போது குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையையும் உறுதி செய்ய முடியும். கேமரா பொருத்தும் பணிகள் வரும் அக்டோபா் மாதத்துடன் முடிவடையும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT