சென்னை

வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிா்த்து நடிகா் தனுஷ் தொடா்ந்த வழக்கில் இன்று தீா்ப்பு

DIN

சென்னை: வெளிநாட்டு சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிா்த்து நடிகா் தனுஷ் தொடா்ந்த வழக்கில் வியாழக்கிழமை (ஆக.5) தீா்ப்பளிப்பதாக உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நடிகா் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். கண்டன கருத்துகளையும் நீதிபதி தெரிவித்திருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து விஜய் மேல்முறையீட்டு வழக்குத் தொடா்ந்து, அபராதம் செலுத்த இடைக்கால தடை பெற்றாா்.

நடிகா் விஜய் தொடா்ந்த வழக்கைப் போன்றே நடிகா் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடா்ந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகா் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு ரூ.60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் தனுஷ் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தி சொகுசு காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி அந்த காரை நடிகா் தனுஷ் பதிவு செய்து கொண்டாா்.

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நடிகா் தனுஷ் தொடா்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து இந்த வழக்கில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) தீா்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT