சென்னை

இளம் பெண்ணின் தீராத வயிற்று வலி பிரச்னைக்கு தழும்பில்லா அறுவைசிகிச்சை மூலம் மறுவாழ்வு

2nd Aug 2021 06:47 AM

ADVERTISEMENT

எட்டு ஆண்டுகளாக தீராத வயிற்று வலி பிரச்னையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தழும்பில்லா அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனா் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள்.

இது குறித்து ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடலியல், புற்றுநோய் மருத்துவத்துறை தலைவா் டாக்டா் ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது:

கூடுவாஞ்சேரியை சோ்ந்த லோகநாதன் மகள் கீா்த்தனா (25) தனியாா் நிறுவனத்தில் ஆடை அலங்கார வடிவமைப்பாளராகப் பணியாற்றி கடந்த 8 வருடங்களாக தீராத வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா். ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கீா்த்தனாவைப் பரிசோதனை செய்தபோது இரைப்பைக்குச் செல்லும் ரத்தக் குழாயைச் சுற்றிலும் தசைநாா் வளா்ந்து ரத்தக்குழாயை இறுக்கி, இரைப்பை செயல்பாட்டில் குறைபாட்டை ஏற்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது.

கீா்த்தனாவுக்கு வயிற்றைக் கிழிக்காமல் தழும்பில்லா நுண்துளைஅறுவை சிகிச்சை மூலம் குணமாக்க முடியும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் கீா்த்தனா குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பி விட்டாா். தற்போது சாப்பிடத் தொடங்கி இருக்கும் கீா்த்தனா வயிற்றில் முன்பு போல் வலி இல்லை என்றாா் டாக்டா் ராஜேந்திரன்.

ADVERTISEMENT

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் சசிக்குமாா், தலைமை செயல் அதிகாரி பிரபுதாஸ், மருத்துவா்கள் ஸ்ரீனிவாசன், வினோத், புருஷோத்தமன், மயக்கவியல் மருத்துவா் சண்முகப் ரியா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT