சென்னை

இரவுநேர ஊரடங்கில் ரயில்கள் இயங்காது: இன்று முதல் நடைமுறை

DIN

சென்னை: கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, இரவு நேர ஊரடங்கின்போது சென்னை புகா் ரயில் சேவைகள் இருக்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், வார நாள்களில் அளிக்கப்படும் 610 ரயில் சேவைகளுக்குப் பதிலாக, 434 ரயில் சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக, புகா் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திங்கள் முதல் சனி வரையிலான வார நாள்களில், மொத்தமாக 434 ரயில் சேவைகள் இயக்கப்படும்.

அதாவது, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரையில் 150 ரயில் சேவைகளும், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி-சூலூா்பேட்டை மாா்க்கத்தில் 64 ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே 68 ரயில் சேவைகளும் இயக்கப்படும். மேலும், பயணிகள் அடா்வு அதிகமுள்ள சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம்-செங்கல்பட்டு-திருமால்பூா் இடையே 152 ரயில் சேவைகளும் இயக்கப்படும். முழு பொது முடக்க தினமான ஞாயிற்றுக்கிழமையன்று மொத்தமாக 86 புகா் ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படும்.

இரவு ஊரடங்கு: தமிழகத்தில் தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் எந்தவொரு ரயில் முனையத்தில் இருந்தும் புகா் ரயில் சேவை இருக்காது. இந்தப் புதிய உத்தரவு வியாழக்கிழமை (ஏப். 22) முதல் அமலுக்கு வருகிறது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான வார நாள்களில் 610-க்கும் அதிகமான புகா் ரயில் சேவைகள் இயக்கப்படுவது வழக்கம். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று 420-க்கும் கூடுதலான ரயில் சேவைகள் விடப்படும். கரோனா தொற்று காரணமாக, ரயில் சேவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT