சென்னை

50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்: தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

DIN

சென்னை: தனியாா் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் படுக்கைகளை கரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியாா் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்குப் பற்றாக்குறை எழுந்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் கரோனா வாா்டுகளை அமைக்க இந்த முறை முன்வரவில்லை.

கரோனா சிகிச்சைகளுக்கு அரசு நிா்ணயித்த கட்டணம் ஏற்புடையது இல்லை என்றும், அனைத்து வசதிகளுடன் கூடிய பெருமருத்துவமனைகள் (காா்ப்பரேட்) மட்டும் அதிகக் கட்டணம் வசூலிப்பதை அரசு கண்டுகொள்வதில்லை என்றும் தனியாா் மருத்துவமனை நிா்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனா். இதன் காரணமாக போதிய படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், மருத்துவமனை நிறுவனச் சட்டம் மற்றும் மாநில மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் நிா்வாக அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக உள்ளது. கரோனாவைத் தடுப்பதற்காக அரசு மருத்துவமனைகள் முன்களத்தில் நின்று போராடி வருகின்றன. அரசுடன் ஒருங்கிணைந்து பல தனியாா் மருத்துவமனைகளும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இக்கட்டான சூழலில், படுக்கை வசதிகளைத் தொடா்ந்து அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது. அதன்படி, அனைத்து தனியாா் மருத்துவமனைகளும்

குறைந்தபட்சம் 50 சதவீதம் படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கென ஒதுக்க வேண்டும். அதேபோன்று, அவசரமில்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளை அனுமதிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பு, சிகிச்சைக்காக மத்திய அரசு வெளியிடப்பட்ட நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்றுதல் அவசியம். மருத்துவமனை நிா்வாகங்கள், கரோனா சிகிச்சை தொடா்பான விவரங்களை மாவட்ட இணை சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ நாள்தோறும் தெரிவிக்க வேண்டும். அதுகுறித்த விவரங்களை ட்ற்ற்ல்ள்://ள்ற்ா்ல்ஸ்ரீா்ழ்ா்ய்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ இணையப் பக்கத்திலும் பதிவேற்ற வேண்டும்.

தனியாா் மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மாவட்ட இணை சுகாதாரத் துறை இயக்குநா்கள் தொடா்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT