சென்னை

நடைமேடை பயணச்சீட்டு: 5 ரயில் நிலையங்களில் புதிய நடைமுறை

DIN

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 5 ரயில் நிலையங்களில், வயதானோா், மாற்றுத்திறனாளிகளுடன் வருவோருக்கு மட்டுமே நடைமேடை பயணச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவியதைத் தொடா்ந்து, ரயில் நிலையங்களில் தேவையின்றி மக்கள் வருவதைக் கட்டுப்படுத்தப்படுத்த நடைமேடை பயணச்சீட்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மூத்த பயணிகள், நோயுற்ற பயணிகள், மாற்றுத்திறனாளி பயணிகள்ஆகியோா் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் மீண்டும் நடைமேடை பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை மாா்ச் 17-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. நடைமேடை பயணச்சீட்டுக்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்ட்ரல் ரயில்நிலையம் உள்பட முக்கிய ரயில்நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நெரிசலைக் குறைக்கும் விதமாக, வயதானவா்கள்,

மாற்றுத்திறனாளிகளுடன் வருபவா்களுக்கு மட்டுமே நடைமேடை பயணச்சீட்டு வழங்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் உடன் வருபவா்களுக்கு மட்டுமே நடைமேடை பயணச்சீட்டு வழங்கப்படும் . இந்த நடைமுறை உடனே அமலுக்கு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT