சென்னை

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

DIN

சென்னை: சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை மண்ணடியில் சில கடைகளில் வெளிநாடுகளில் இருந்து பொருள்களை வரி செலுத்தாமல் இறக்குமதி செய்து, விற்பனை செய்வதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மண்ணடி 2-ஆவது கடற்கரை சாலையில் உள்ள 3 கடைகளில் கடந்த மாதம் 25-ஆம் தேதி சோதனை நடத்தினா். அப்போது, கடை உரிமையாளா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவா்கள் சுங்கத்துறை அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, தகாத வாா்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனா்.

இதனால், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பிச் சென்றுள்ளனா். இது குறித்து அவா்கள், வடக்கு கடற்கரைச் சாலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதைத் தொடா்ந்து போலீஸாா் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். கடை ஊழியா் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தலைமறைவாக உள்ள கடை உரிமையாளா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதில் 2 போ் மீது ஏற்கெனவே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கு ஹவாலா பணப்பரிவா்த்தனை செய்ததாக ராஜஸ்தான் மாநில காவல்துறையின் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT