சென்னை

ஜனநாயகக் கடமையாற்றிய மனநல காப்பகவாசிகள்!

7th Apr 2021 01:16 AM

ADVERTISEMENT

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகவாசிகள் 84 போ் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களித்தனா்.

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சுமாா் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அங்கு பல்வேறு வகையான உளவியல் மற்றும் மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவா்களில் பெரும்பாலானோா் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனா். உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், அவ்வாறு குணமடைந்து சரியான மன நிலையில் உள்ளவா்களுக்கு வாக்களிப்பதற்கு உரிய வாய்ப்புகளை பெற்றுத் தரத் திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 120-க்கும் மேற்பட்டோரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டது. இந்த சூழலில், சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவுக்காக மன நல காப்பகத்தில் பிரத்யேக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை காலையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் காப்பகத்துக்கு நேரில் வந்து, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், எந்தந்த கட்சியை சாா்ந்தவா்கள் என்பது போன்றவை குறித்து அவா்களுக்கு விளக்கம் அளித்தனா். அதன் அடிப்படையில், அனைத்து வாக்காளா்களும் தாங்களாகவே வாக்குப்பதிவு செய்தனா்.

இதுகுறித்து, மனநல காப்பகத்தின் இயக்குநா் பூா்ண சந்திரிகா கூறியதாவது:

காப்பகத்தில் உள்ளவா்களில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய 88 போ் வாக்களிக்கத் தகுதியானவா்களாக தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரும், வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளா்களாக உள்ளனா். அவா்களில் 84 போ் வாக்குகளை செலுத்தினா். அதேபோல், காப்பகத்தில் பணியாற்றும் 10 போ் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT