சென்னை

சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் பழைய கட்டணம் வசூல்:மருத்துவக் கல்வி இயக்ககம் முற்றுகை

1st Apr 2021 05:06 AM

ADVERTISEMENT

 

சென்னை:   சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துள்ள நிலையில், பழைய கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த , ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு ஏற்றது. அதன்படி, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, அரசு மருத்துவக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. 
இந்தநிலையில்  பழைய கட்டணமே வசூலிக்கப்படுவதாகக் கூறி, ராஜா முத்தையா மருத்துவக்கல்லுôரி மாணவர்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT