சென்னை

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை, செப். 29: டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து , மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவைக் கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மனுதாரா் தரப்பில், ‘சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே வாகனங்களை மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும்’ என தெரிவித்தாா். அப்போது மாநகராட்சி தரப்பில், வாகனங்களை அப்புறப்படுத்துவது போக்குவரத்து போலீஸாரின் பணி என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் போலீஸாரை கேட்டுக் கொள்ள வேண்டும். கொசுவை கட்டுப்படுத்த புகை போடுவது போன்ற பணிகளுக்கு உரிய கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனா். பின்னா், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து , மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT