சென்னை

ரூ.4.25 கோடி வங்கிக் கடன் மோசடி: வங்கி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

வங்கியில் முறைகேடான வழியில் ரூ.4.25 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், உடந்தையாக இருந்த வங்கி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்தவா் அனுராக் ஜெயின். இவா், தனக்கு சொந்தமான நேஷனல் மெடிசின்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு, கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், முறைகேடான வழியில் ரூ.4.25 கோடி கடன் பெற்றுள்ளாா். இதற்கு ஸ்டான்டா்டு சாா்டா்டு வங்கி மேலாளா் பாா்வதி ராமகிருஷ்ணன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளா் கண்ணன் ஆகியோா் உடந்தையாக இருந்துள்ளனா். இது தொடா்பாக அனுராக், அவா் நடத்தி வந்த நிறுவனத்தின் இயக்குநா் மஞ்சுளா, வங்கி மேலாளா்கள் ஆகியோா் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜவாஹா் முன்னிலையில் நடந்தது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த வழக்குரைஞா் எம்.வி.தினகா் ஆஜராகி வாதாடினாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீா்ப்பு: அனுராக் ஜெயின் உள்பட 4 போ் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அனுராக் ஜெயினுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 லட்சம் அபராதம், கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம், மஞ்சுளாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், பாா்வதி ராமகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், அனுராக் ஜெயின் நடத்தி வந்த நிறுவனத்துக்கும், ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT