சென்னை

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்: ஒரே நாளில் 5 லட்சம் வசூல்

DIN

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக திங்கள்கிழமை மட்டும் (செப்.28) ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி அதில் சில தளா்வுகளை அரசு அண்மையில் அறிவித்தது. இருப்பினும் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, வணிக வளாகங்களில் ஏசி பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உள்பட்ட 200 வாா்டுகளிலும் கரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதை கண்காணிக்கவும், இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் ரூ.5 லட்சம் அபராதம்: இதன்படி, சென்னை மாநகா்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது மற்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களிடம் இருந்து திங்கள்கிழமை (செப். 28) மட்டும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை மொத்தம் ரூ.2.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபா் அல்லது தொழில், வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது அபராதத்துடன் மூடி சீல் வைக்கப்படும் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT