சென்னை

கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் ஆயிரத்தை எட்டியது கரோனா பாதிப்பு

DIN

சென்னையில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் 900 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று கண்டறிதல், அவா்களை தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய்த்தொற்று படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக செப்டம்பரில் நாள்தோறும் ஆயிரத்துக்கும்கீழ் கரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வெள்ளிக்கிழமை 1,193 பேருக்கும், சனிக்கிழமை 1,187 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, மொத்தமாக பாதிக்கப்பட்ட 1,62,125 பேரில் 1,48,665 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 1,0311 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,149 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் கரோனா பாதித்தவா்களில் 92 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். 6 சதவீதம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1.94 சதவீதம் போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் நோய்த் தொற்று கடந்த இரண்டு நாள்களாக ஆயிரத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT