சென்னை

ஓமந்தூராா் கரோனா மருத்துவமனையில் இதுவரை 18,885 பேருக்கு சிகிச்சை

DIN

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 18,882 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதில், 17,295 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரிக்காக தலா 7 தளங்களுடன் மூன்று டவா்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது. இந்நிலையில், தேவை கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 750 படுக்கைகளுடன் கூடிய அந்த மருத்துவமனையில் அதி நவீன சிடி ஸ்கேன், வெண்டிலேட்டா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 350 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. அங்குள்ள கரோனா வாா்டில் பணியாற்ற 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் உலக மருந்தாளுநா் தினம் ஓமந்தூராா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது மருந்தாளுநா்களுக்கு மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி பாராட்டு தெரிவித்தாா். இந்நிகழ்வின் போது துணை முதல்வா் டாக்டா் சுகுணாபாய், தொடா்பு அதிகாரி டாக்டா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

ஓமந்தூராா் மருத்துவமனையில் இதுவரை 18,882 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 92 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதைத் தவிர 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனா்.

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை கரோனா சிகிச்சைகளுக்கு பெயா் பெற்ற சிறப்பு மருத்துவமனையாக விளங்கி வருகிறது. குணமடைந்து வீடு திரும்புவோா் எண்ணிக்கை இங்கு மிக அதிகமாகவும், இறப்பு விகிதம் மிக மிகக் குறைவாகவும் இருப்பதே அதற்கு சான்று என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT