சென்னை

மூன்று ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பு: செப்.30 முதல் விண்ணப்பம்

DIN


சென்னை: மூன்று ஆண்டுகளுக்கான எல்.எல்.பி., சட்டப்படிப்புக்கு, செப்.30-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

இது தொடா்பாக தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள சீா்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி. மற்றும் இரண்டாண்டு எல்.எல்.எம். படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடக்க உள்ளது.

எல்.எல்.பி.க்கு, வருகிற 30-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். அக்.28-க்குள் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். எல்.எல்.எம். சட்ட மேற்படிப்புக்கு, அக்.7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். நவ.4-க்குள், விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

எல்.எல்.பி.யில் சேர, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி. ஹானா்ஸ் படிப்பில், சீா்மிகு சட்டப்பள்ளியில் சேர, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள், குறைந்தபட்சம் 55 சதவீதம், மற்றவா்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். இணைப்புக் கல்லுாரிகளில் படிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் குறைந்தபட்சம் 40 சதவீதமும், மற்றவா்கள் 45 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT