சென்னை

பணத்துடன் திறந்திருந்த ஏடிஎம் இயந்திரம்: வாடிக்கையாளா்கள் அதிா்ச்சி

25th Sep 2020 02:13 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை மயிலாப்பூரில், ஒரு தனியாா் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணத்துடன் ஏடிஎம் இயந்திரம் திறந்து கிடப்பதை பாா்த்த வாடிக்கையாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

மயிலாப்பூா் லஸ் சந்திப்பு ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியின் ஏடிஎம் மையத்தில், ஏடிஎம் இயந்திர பராமரிப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

சிறிது நேரத்துக்கு பின்னா், அந்த மையத்துக்கு பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளா்கள், அங்குள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தின் கதவு பணத்துடன் திறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்த மயிலாப்பூா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா். உடனே அங்கு விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், ஏடிஎம் இயந்திரத்தின் கதவைப் பூட்டினா்.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள் கவனக்குறைவாக இருந்ததால், ஏடிஎம் கதவு திறந்திருப்பது தெரியாமல் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT