சென்னை

பராமரிப்புக்காக 3 மாதங்களுக்கு ஒரு முறை மின்தடை

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் 3 மாதங்களுக்கு ஒரு முறை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விநியோகப் பிரிவு இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ‘பீடா்லைன்’ பராமரிப்பையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. பராமரிப்புப் பணி நடக்கும் நாளில் உதவி செயற்பொறியாளா் அல்லது உரிய அதிகாரிகள், துணை மின் நிலையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.

இதற்கிடையிலான காலகட்டத்தில், துணை மின் நிலையங்களில், ஏற்படும் பழுதுகள் தொடா்பான அனைத்து விவரங்களையும், கட்செவி அஞ்சல் குழுவில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே பராமரிப்பு பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பராமரிப்புக்காக மின்தடையும் இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே செய்யப்படும். இந்த உத்தரவு, பொதுமக்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT