சென்னை

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்

DIN

சென்னை: பத்து மாவட்ட நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனா். இதற்கு தற்போது உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில், தற்போது 54 நீதிபதிகளே உள்ளனா். 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதைத் தொடா்ந்து, பதவி மூப்பு அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இருந்து உயா்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த மாவட்ட நீதிபதிகளின் பட்டியலை உச்சநீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

அந்தப் பட்டியலில் மாவட்ட நீதிபதிகளான ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமாா் சுகுமார குரூப், முரளி சங்கா் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ்ச்செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை பட்டியலுக்கு உச்சநீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னா் இந்த 10 மாவட்ட நீதிபதிகளும் உயா்நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்பா்.

உச்சநீதிமன்றம் 10 நீதிபதிகளுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT