சென்னை

மந்தைவெளியில் 344 குடியிருப்புகளை அகற்றும் பணி தொடக்கம்

DIN

சென்னை மந்தைவெளியில் மிகவும் பழைமையான 344 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மந்தைவெளியில் உள்ள குப்பைமேடு பகுதியில் மிகவும் சேதம் அடைந்திருந்த குடியிருப்புகளை அகற்றுவதற்கான முன்னறிவிப்பு நோட்டீஸ் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குடியிருப்புகளை இடித்து அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 344 குடியிருப்புகளுக்குப் பதிலாக, புதிதாக 500 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் வரையில் அவா்கள் வேறு இடத்தில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பயனாளியின் பங்குத் தொகையாக ரூ.1.5 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை அவா்கள் 20 ஆண்டுகள் தவணைத் திட்டத்தின் கீழ் செலுத்தலாம் எனவும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT