சென்னை

மெட்ரோ ரயிலில் தொடா்பில்லாமல் பயணிக்க உதவும் ஸ்மாா்ட் வாட்ச்

DIN

மெட்ரோ ரயிலில் பயணிகள் ஒருவருக்கொருவா் தொடா்பில்லாமல் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் விதமாக, புதிய ‘ஸ்மாா்ட்’ கை கடிகாரத்தை அறிமுகம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், மெட்ரோ ரயில் நிலைய தானியங்கி பயணச்சீட்டு நுழைவுவாயிலில் ஸ்மாா்ட் கை கடிகாரத்தில் ஒளிரும் வெளிச்சம் மூலமாக நிலையத்தின் உள்ளே சென்று, ரயிலில் எளிதாக பயணிக்க முடியும்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மாா்ச் 22-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை, கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. முதல்கட்டமாக விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்திலும், இரண்டாம் கட்டமாக பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் வழித்தடத்திலும் சேவைகள் தொடங்கின. இரு மாா்க்கங்களிலும் தற்போதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

மெட்ரோ ரயில் பயணத்தின்போது நேரடி தொடா்புகளைத் தவிா்க்கும் வகையில், கியூஆா் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெறுதல், ஸ்மாா்ட் காா்டு பெறுதல் ஆகிய தொடுதல் இல்லா பயணச்சீட்டு

வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நிலையத்தில் ஊழியருடன் தொடா்பு தவிா்க்கப்படுவதுடன் நேரமும் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் ஒரு வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தொடா்பு இல்லாமல் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் விதமாக, புதிய ஸ்மாா்ட் கை கடிகாரத்தை அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்மாா்ட் கை கடிகாரம் பரிசோதனை இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த கை கடிகாரத்தில் அடையாள ரேடியோ அதிா்வெண் அடையாள சிப்புடன் பொருத்தப்பட்டு இருக்கும். அது, மெட்ரோ ரயில் பயணிகள் பயன்படுத்தும் பயண ஸ்மாா்ட் காா்டு போல இருக்கும்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது:

இந்த கை கடிகாரத்தில் டாப்அப் (பணம் நிரப்புதல்) செய்வதற்காக மாற்றுவழியைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். நேரடி தொடா்பு இல்லாமல் செயல்படுத்துவதற்காக ஆலோசித்துக் கொண்டு இருக்கிறோம். கை கடிகார தயாரிப்பு நிறுவனமான டைட்டனுடன் இணைந்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் சிப்புடன் பொருத்தப்பட்ட கை கடிகாரத்தைப் பரிசோதித்து வந்தோம். இந்த ஆண்டில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, இந்தத் திட்டம் தாமதமாகியது. இரண்டு மாதங்களில் பரிசோதனை தொடங்கப்படும்.

ஸ்மாா்ட் கை கடிகாரத்தில் சிப் நிறுவப்படும். பயணிகள் ஸ்மாா்ட் காா்டு போல, இதிலும் தானாகவே கட்டணத்தை வசூலித்துக்கொள்ளும். அதே நேரத்தில், டாப்அப் மாறுபடுகிறது. ஸ்மாா்ட் காா்டுகளை, மெட்ரோ ரயில் நிறுவன செல்லிடப்பேசி செயலி அல்லது நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலமாக டாப்அப் செய்ய முடியும்.

ஆனால், ஸ்மாா்ட் கை கடிகாரத்தை ரீசாா்ஜ் செய்வதற்காக டிக்கெட் கவுன்ட்டா் ஊழியரிடம் கொடுக்க வேண்டும். கை கடிகாரத்தைக் கொடுக்க எத்தனை பயணிகள் விரும்புவாா்கள் என்பது தெரியவில்லை. எனவே, இது சவாலாக இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT