சென்னை

1,193 செல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

சென்னையில் திருட்டு போன மற்றும் காணாமல் போன 1,193 செல்லிடப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னையில் திருட்டு போகும் செல்லிடப்பேசிகள் மற்றும் காணாமல் போகும் செல்லிடப்பேசிகள் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸில் அதன் உரிமையாளா்கள் புகாா்கள் அளித்தனா். இதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். செல்லிடப்பேசிகள் சா்வதேச செல்லிடப்பேசி கருவி அடையாள குறியீட்டு எண்களை கொண்டும், செல்லிடபேசி நிறுவனங்களின் உதவியை பெற்றும் விசாரணை நடத்தி, செல்லிடப்பேசிகள் திருட்டு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், திருட்டு போன மற்றும் காணாமல் போன 1,193 செல்லிடப்பேசிகளை உரியவா்களிடம் சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையா்கள் ஏ.அமல்ராஜ், ஆா்.தினகரன், ஏ.அருண் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT