சென்னை

தொலைக்காட்சி மூலம் தொல்காப்பியம் கற்கலாம்: சென்னைப் பல்கலை. ஏற்பாடு

17th Sep 2020 03:44 AM

ADVERTISEMENT

தொலைக்காட்சி மூலம் தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ்ப் பாடங்களை ஒளிபரப்ப சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறியதாவது: பொதுமுடக்கத்தின்போது இளநிலை, முதுநிலை தமிழ்ப் பாடங்களை விடியோவாக பதிவு செய்து தொடராக வெளியிட முடிவு செய்திருந்தோம். இதற்காக மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பொதுவான பாடத்திட்டத்தைக் கண்டறிந்து வருகிறோம்.

அதன் அடிப்படையில், தொல்காப்பியத்தைத் தொடராக உருவாக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. இதே போல் பொதுவான அனைத்துப் பாடங்களையும் கண்டறிந்து, ஒவ்வொரு காணொலியும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை, பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு நாளும், "ஸ்வயம் பிரபா' எனும் டிடிஎச் சேனலில், 4 மணி நேரம் அளவிலான புதிய பாடங்கள், 6 முறை ஒளிபரப்பப்படும்.

ADVERTISEMENT

யிற்றுக்கிழமையைப் பொருத்தவரை, வார நாள்களில் ஒளிபரப்பான புதிய பாடங்கள் அனைத்தும் மறு ஒளிபரப்பு செய்யப்படும். தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து, ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் சென்னை ஐஐடியில் உள்ள ஸ்டுடியோவில் பாடங்களைக் காணொலியாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான ஒப்பந்தம், சென்னை ஐஐடியுடன் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இவ்வாறு அனைத்து விரிவுரைகளும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஒரு டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கும் முன் முயற்சியாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தத் தொடரின் பயனை அதிகளவிலான மாணவர்கள் அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக துணைவேந்தர் கௌரி தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT