சென்னை

காலமானார் பி.ஆர்.கிருஷ்ணகுமார்

17th Sep 2020 02:50 AM

ADVERTISEMENT

 

கோவை: ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநரும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பி.ஆர்.கிருஷ்ணகுமார் (69) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.
கேரள மாநிலம், ஷோரனூரைச் சேர்ந்த இவருக்கு, கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள குவேம்பு பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. நாட்டின் முதலாவது குருகுல ஆயுர்வேத கல்லூரியை நிறுவிய இவர் "ஆயுர்வேதா' என்ற பெயரில் ஆங்கில இதழ் நடத்தி வந்தார். 
 கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை இரவு காலமானார். இவருக்குத் திருமணம் ஆகவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT