சென்னை

இணையவழி வகுப்பில் பங்கேற்ற மாணவன் தற்கொலை

17th Sep 2020 03:21 AM

ADVERTISEMENT

 

சென்னை: வீட்டில் தனியாக இருந்து, இணைய வழி வகுப்பில் பங்கேற்ற மாணவன், தற்கொலை செய்து கொண்டார். 
சென்னை மேடவாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் செல்வம்.  இவரது மகன் கார்த்திக் (14),  செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் வெளியே சென்ற நிலையில் புதன்கிழமை பிற்பகல் கார்த்திக் இணையவழி வகுப்பில் பங்கேற்றார்.  இந்நிலையில்,   பெற்றோர்  மாலை வீடு திரும்பிய பிறகு, நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை திறக்கவில்லை. 
இதையடுத்து   ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது கார்த்திக் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளிக்கரணை காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வகுப்புக்குப் பயன்படுத்திய செல்லிடப்பேசியைக் கைப்பற்றி, போலீஸார் விசாரணை நடத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT