சென்னை

செப்.24-இல் அஞ்சல் குறைதீர் முகாம்

17th Sep 2020 03:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: அஞ்சல்துறை சார்பில், குறை தீர்வு முகாம் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த குறைதீர்வு முகாமில், அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் வாயிலாக தபால் சேவைகள், அதாவது, மணியார்டர், பதிவுத் தபால், சேமிப்பு வங்கி  முதலிய சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் தெரிவிக்கலாம். அல்லது தபால் வாயிலாகவோ அல்லது doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ செப்டம்பர் 21- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். குறைகளை தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசலை தலைமை அஞ்சலகம், சென்னை - 600002 என்ற முகவரிக்கு  "குறைதீர்வு முகாம்" என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், பயனாளிகள் குறைதீர்வு முகாமில் நேரில் வந்தும் கலந்து கொள்ளலாம். இந்தத் தகவல்,  அண்ணா சாலை தலைமை அஞ்சலக அதிகாரி சு. குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT