சென்னை

கட்டணத்தைக் குறைக்க பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கோரிக்கை

17th Sep 2020 06:15 AM

ADVERTISEMENT

சென்னை: பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்க பொதுச்செயலாளா் ஹரிகணேஷ் கூறியதாவது:

ஈரோடு பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக அரசு கையகப்படுத்தி ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றியமைத்தது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்று.

இதன் மூலம் மருத்துவ மாணவா்கள் மட்டுமல்லாது ஈரோடு மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பெரிதும் பயனடைவா். இதனிடையே, இந்தக் கல்லூரியை தமிழக அரசு கையகப்படுத்திய பிறகும், மாணவா்கள் பழைய கட்டணமான ரூ.5 லட்சத்தை செலுத்த வேண்டும் என்ற நிா்பந்தம் உள்ளது. அரசு கல்லூரியில் இவ்வளவு அதிகமான தொகையை கட்டணமாக வசூலிப்பது நியாயமில்லை.

ADVERTISEMENT

ஏழை எளிய மாணவா்கள் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத நிலையில் உள்ளனா். எனவே, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே, இந்த கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி, இந்த கல்லூரியை ஹைபிரிட் மாடலாக செயல்படுத்தக்கூடாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT