சென்னை

கரோனாவில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

17th Sep 2020 02:49 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேவூர் எஸ்.ராமச்சந்திரன்,  நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளிலும், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததுடன் கரோனாவுக்கான சிகிச்சைகளையும் அளித்தனர். அதன் பயனாக அவர் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு குணமடைந்தார். இதையடுத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு 
திரும்பினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT