சென்னை

ஆவடி இன்ஜின் தொழிற்சாலையில் பொதுமேலாளா் பொறுப்பேற்பு

17th Sep 2020 06:27 AM

ADVERTISEMENT

சென்னை: ஆவடி இன்ஜின் தொழிற்சாலையின் பொதுமேலாளராக டெபாஷிஷ் பானா்ஜி, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலையில், கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். முன்னதாக இவா், கொல்கத்தாவில் உள்ள துப்பாக்கி மற்றும் பீரங்கிக் குண்டு தொழிற்சாலையில் பணியாற்றினாா். குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில், பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலையின், வெடிபொருள்கள், ஆயுதம், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளாா். இதுமட்டுமின்றி, பொறியியல், தரக் கட்டுப்பாடு, திட்ட நடைமுறை உள்ளிட்டவற்றிலும் இவருக்கு பரந்து விரிந்த அனுபவம் உண்டு.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT