சென்னை

இறுதிப் பருவத் தேர்வுக்கு முன் முதுநிலை படிப்பில் சேர்க்கை கூடாது

17th Sep 2020 03:17 AM

ADVERTISEMENT

சென்னை: இறுதிப் பருவத் தேர்வுக்கு முன், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தினால்,  சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

கரோனா நோய்த் தொற்று காரணமாக இறுதி பருவத் தேர்வைத் தவிர இதர பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அளிக்கப்பட்டன. இதற்கிடையே முந்தைய (5-ஆவது பருவம்) தேர்வை அடிப்படையாகக் கொண்டு , முதுநிலைப் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சில கல்லூரிகள் நடத்தி வருவதாகப் புகார் எழுந்தது. இறுதி பருவத் தேர்வு முடியும் முன், முதுநிலைப் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தினால், அந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம்
எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT