சென்னை

அண்ணா சுரங்கப்பாதை திறப்பு

17th Sep 2020 03:21 AM

ADVERTISEMENT


சென்னை:  பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய நுழைவுவாயில் பி-பகுதியில் உள்ள அண்ணா சுரங்கப்பாதை புதன்கிழமை திறக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை மெட்ரோ  ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பழைய அண்ணா சுரங்கப்பாதை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பொதுமக்கள், மெட்ரோ ரயில் பயணிகள் பயன்பாட்டுக்காக இந்த சுரங்கப்பாதை புதன்கிழமை திறக்கப்பட்டது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பு: 
சென்னையில் மிகப்பெரிய சுரங்கப்பாதையில் ஒன்றான பழைய அண்ணா சுரங்கப்பாதை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழே அமைந்துள்ளது. தற்போது உள்ள மெட்ரோ நுழைவு கட்டமைப்புகளின் அழகியலுடன் கிரானைட் தளம் அமைத்தல், சுவர் டைலிங், புதிய விளக்குகளுடன் சுரங்கப்பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுதளத்துக்கு சுரங்கப்பாதை நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. வாலாஜா சாலை, எல்லிஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை, அண்ணாசாலை ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிப்பதுடன், சாலையை எளிதில் கடக்கலாம்.
காதிபவன் மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள தமிழக அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றையும் இந்த அண்ணா சுரங்கப்பாதை இணைக்கிறது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பயணிகளை வழிநடத்த அண்ணா சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் மற்றும் நடைபாதைகளிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT