சென்னை

தகவல் ஆணையர் பதவிக்கு  விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு

10th Sep 2020 04:12 AM

ADVERTISEMENT

 


சென்னை:  தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள தகவல் ஆணையர் பதவிக்கு தனிநபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கடந்த மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 7}ஆம் தேதிக்குள் தன்விவரக் குறிப்புகளை அனுப்ப வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையர் தேர்வு செய்யப்படுவர். இதற்கான பணிகளை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT