சென்னை

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை

DIN

சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு அக்டோபா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தை சாா்ந்த அரசு, அரசு உதவிபெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-21-ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 10 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித் தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித் தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 2020-21-கல்வி ஆண்டில்‘ இத்திட்டத்தின்கீழ் 1,35,127 மாணவ, மாணவியா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையைப் பெற  இணையதளத்தில் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் அல்லது இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT