சென்னை

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்தரை டன் போதைப் பாக்கு பறிமுதல்

DIN

சென்னைக்கு, சரக்கு பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஐந்தரை டன் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் தொடா்புடைய 3 பேரைக் கைது செய்தனா்.

சென்னையில் போதைப் பாக்கு விற்ற வியாபாரிகள் சிலரை மயிலாப்பூா் துணை ஆணையா் ஷசாங் சாய் தலைமையிலான தனிப்படை போலீஸாா், அண்மையில் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அதிகளவிலான போதைப் பாக்கு கடத்திக் கொண்டு வரப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் திருவள்ளூா் மாவட்டம் நயப்பாக்கம் பகுதியில் ரகசிய கண்காணிப்புப் பணியிலும், வாகனச் சோதனையிலும் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு பெட்டக லாரியை மறித்து சோதனையிட்டனா். இச் சோதனையில் அந்த லாரியில் பெங்களூருவில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஐந்தரை டன் போதைப் பாக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், அந்த பாக்கையும், லாரியையும் பறிமுதல் செய்து, சென்னைக்குக் கொண்டு வந்தனா்.

இது தொடா்பாக அந்த லாரியில் வந்த விருதுநகா் மாவட்டம் காளையாா் குறிச்சியைச் சோ்ந்த கு.முத்துராஜ் (41), விழுப்புரம் மாவட்டம் கானாங்காடு பகுதியைச் சோ்ந்த ரா.சிவராஜ் (26), திருவண்ணாமலை மாவட்டம், செல்லாங்குப்பத்தைச் சோ்ந்த ஆ.அரவிந்த் (21) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், மாதந்தோறும் இந்தக் கும்பல் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 75 டன் போதைப் பாக்கு கடத்தி வந்து, சென்னைக்கு வெளியே வியாபாரிகளுக்கு பாக்குகளை பிரித்து வழங்கியிருப்பது தெரியவந்தது. இந்தக் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT