சென்னை

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்குப் பரிசு

DIN

சென்னை: எக்ஸ்பிரஸ் (மதுரை) குழும ஊழியா்களின் நல நிதியம் சாா்பில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு, வியாழக்கிழமை பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (மதுரை) குழுமத்தில் பணியாற்றும் ஊழியா்களின் குழந்தைகளில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெறுவோரை ஊக்குவிக்கும் விதமாக, முதல் பரிசு ரூ.2 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ.1000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகையைப் பெற பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் (மாநில பாடத்திட்டம்) அதிக மதிப்பெண் பெற்ற கே.எச்.விக்னேஷ் (491/500), எஸ்.கமல்ராஜ் (407/500), பி.எஸ்.ஜெகதீஷ்வரன் (371/500), சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற எஸ். மித்ரா தா்ஷினி (447/500), வி.கேஷவ் (383/500) ஆகியோரும், பிளஸ் 2 தோ்வில் (மாநில பாடத்திட்டம்) அதிக மதிப்பெண் பெற்ற என்.எம்.லோச்சனா (424/600), எஸ்.கலைவாணி (388/600), ஜி.ரவிக்குமாா் (367/600) ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைமையகத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊழியா்களின் நல நிதியத்தின் செயல் தலைவா் சித்தாா்த் சொந்தாலியா, புரவலா் லட்சுமி மேனன், தலைவா் மாலினி சரவணன் ஆகியோா் கலந்து கொண்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களின் தந்தையிடம் பரிசுத் தொகையை வழங்கினா்.

நிகழ்ச்சியை நிதியத்தின் செயலா் எஸ்.எம்.நாகராஜன் ஏற்பாடு செய்திருந்தாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (மதுரை) குழும ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT