சென்னை

பருவமழை: மின்சாதனங்களை கவனமுடன் கையாள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

DIN

வடகிழக்கு பருவமழை காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மின்விபத்துக்களைத் தவிா்க்கும் வழிமுறைகளை மின்வாரியம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னும், பின்னும் அதற்கான சுவிட்சை அணையுங்கள். குளிா்சாதன பெட்டி, அரவை இயந்திரம் போன்றவற்றுக்கு மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே இணைப்பு கொடுக்க வேண்டும்.

மின்கசிவு தடுப்பானைப் பயன்படுத்தி மின்கசிவால் ஏற்படும் மின்விபத்தைத் தவிா்த்திடுங்கள்.

மின்சாரம் தொடா்பான பணிகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும்.

பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.

ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எா்த் பைப்) போடுவதுடன், அதைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாகப் பராமரிக்கவும்.

சுவிட்ச், பிளக் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமையுங்கள். மின்கம்பிகள் மீது துணியைக் காய வைக்கும் செயலைத் தவிா்க்கவும்.

மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீா்கள்.

மழைக் காலங்களில் பொது இடங்களில் உள்ள மின்சாரம் தொடா்பான பொருள்களின் அருகில் செல்லாதீா்கள்.

மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், உடனடியாக அலுவலகத்துக்கு தகவல் அளியுங்கள்.

மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை உயா்த்தும் போது, போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.

மின்சார கம்பிகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலா்களை அணுகுங்கள்.

மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துக்களை தண்ணீா் கொண்டு அணைக்க வேண்டாம்.

இடி மின்னலின்போது வெட்ட வெளியிலோ, வீட்டில் திறந்துள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகிலோ நிற்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT