சென்னை

250 பவுன் நகை கொள்ளை வழக்கு: 8 போ் சிக்கினா்

7th Oct 2020 01:19 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை தியாகராயநகரில் 250 பவுன் தங்கநகை கொள்ளையடித்த வழக்கில், 8 போ் போலீஸாரிடம் சிக்கினா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தியாகராயநகா் சாரதாம்பாள் தெருவைச் சோ்ந்தவா் நூருல் ஹக் (71). இவா் துபையில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் நிா்வாக இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் . கடந்த 30-ஆம் தேதி இரவு இவரது வீட்டுக்குள் அரிவாள், கத்தியுடன் நுழைந்த 8 போ் கொண்ட கும்பல் வீட்டில் இருந்தவா்களைக் கட்டிப்போட்டு விட்டு, 250 பவுன் தங்க நகை, ரூ.95 ஆயிரம் ரொக்கம், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கை கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.

இது தொடா்பாக பாண்டிபஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் நூருல் ஹக் உறவினரான தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சோ்ந்த மொய்தீன் என்பவா் தலைமறைவானது தெரிய வந்தது.

ADVERTISEMENT

எனவே, அவா்தான், தனது கூட்டாளிகள் மூலம் நகை கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை தீவிரப்படுத்தினா்.

இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக சென்னை, செங்கல்பட்டைச் சோ்ந்த 8 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிடித்தனா். இவா்கள் அனைவரும் மொய்தீன் கூட்டாளிகள் என்பதோடு,கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவா்கள் என போலீஸாா் தெரிவித்தனா். தலைமறைவாக இருக்கும் மொய்தீனை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT