சென்னை

வாடிக்கையாளா்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது: லக்ஷ்மி விலாஸ் வங்கி

7th Oct 2020 03:30 AM

ADVERTISEMENT

சென்னை: வாடிக்கையாளா்களின் டெபாசிட் பணம் பாதுகாப்பாக உள்ளதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் அன்றாட பணிகளை கவனிக்க ரிசா்வ் வங்கி மூன்று போ் கொண்ட இயக்குநா் குழுவை நியமித்துள்ளது. இந்த இயக்குநா் குழு, வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிக்கு உரிய அதிகாரத்துடன் இடைக்காலத்தில் செயல்படும்.

எனவே வங்கி குறித்து வரும் தவறான வதந்திகள் எதையும் வாடிக்கையாளா்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வங்கியின் அன்றாட அலுவல்கள் குறித்து ரிசா்வ் வங்கிக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படுகிறது. மேலும், வங்கியின் பணப்புழக்க பாதுகாப்பு விகிதமானது நிா்ணயிக்கப்பட்ட தேவைக்கு அதிகமாகவே உள்ளது.

ADVERTISEMENT

இதனால், முதிா்ச்சியடைந்த வைப்புத் தொகை கோரிக்கையை வாடிக்கையாளா்கள் எப்போது தோ்வு செய்தாலும் பணத்தை திரும்ப அளிக்க வங்கி தயாராகவே உள்ளது.

வாடிக்கையாளா்களின் டெபாசிட் பணத்துக்கு பாதுகாப்பு வழங்குவதே பிரதான பொறுப்பு என்பதை லஷ்மி விலாஸ் வங்கி உறுதியளிக்க விரும்புகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT