சென்னை

சென்னையில் புறநகா் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

5th Oct 2020 09:08 AM

ADVERTISEMENT

சென்னையில் அத்தியாவசியப் பணிகளுக்கான புறநகா் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது.

ரயில்வே ஊழியா்களுக்காகவும், மத்திய அரசு மருத்துவ பணியாளா்களுக்காகவும் 24 புறநகா் சிறப்பு ரயில்கள் சென்னையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள் கோரிக்கை வைத்தனா்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியா்கள் இந்த சிறப்பு ரயில்களில் இன்று பயணிக்கலாம் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் அத்தியாவசியப் பணிகளுக்கான புறநகா் சிறப்பு ரயில் சேவை இன்று காலை தொடங்கியது.

ஆனால் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அடையாள அட்டை, அலுவலக கடிதம் இருந்தாலும் தலைமைச் செயலக அனுமதிக் கடிதமும் கேட்பதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : chennai
ADVERTISEMENT
ADVERTISEMENT