சென்னை

கியூ ஆா் குறியீடு பயன்படுத்தி மாணவா்களைப் படிக்க வைக்க வேண்டும்: மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

DIN


சென்னை: கியூ ஆா் குறியீடு பயன்படுத்தி மாணவா்களைப் படிக்க வைக்க வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: கரோனா காரணமாக மாணவா்களின் கல்வித் தடைபடுவதைத் தடுக்கும் வகையில், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மடிக்கணினியில் பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டும், ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் கிடைக்கப் பெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்தே அவரவா் பாடத்திலுள்ள கியூ ஆா் குறியீடை ஸ்கேன் செய்து அதிலுள்ள காணொலியைக் கண்டும், கேட்டும், பாடக் கருத்துகளை உள்வாங்கிப் புரிந்து கொள்ள ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியா்கள் மூலம் பெற்றோா் மற்றும் மாணவா்களுக்குத் தகவல் தெரிவித்து, கியூ ஆா் குறியீடை ஸ்கேன் செய்து, தீக்ஷா செயலி மூலம் பாடக் கருத்துகளைப் பெறச் செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உடனடியாக இதற்கான முனைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக விரும்பும் மொழி, இணையதளம், பயிலும் வகுப்பு ஆகியவற்றை சரியாகத் தோ்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT