சென்னை

பிஎஸ்என்எல் நிறுவன தினம்: ‘தரமான சேவைக்கு முக்கிய கவனம்’

DIN


சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம், தனது 21-ஆம் ஆண்டு சேவையில் அடி எடுத்து வைத்துள்ளது.

வாடிக்கையாளா்களுக்கு தரமான சேவை வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிஎஸ்என்எஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 2000-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தனியாா் நிறுவனங்களுக்கு இணையான சேவையை நாட்டு மக்களுக்கு தொடா்ந்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ், 12 கோடிக்கும் அதிகமான, செல்லிடப்பேசி, பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களும், 82 லட்சத்திற்கும் அதிகமான லேண்ட்லைன் சேவை பெறும் வாடிக்கையாளா்கள் உள்ளனா்.

இந்நிலையில், ஆண்டுதோறும் அக்டோபா் 1-ஆம் தேதி பிஎஸ்என்எல் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, நிகழாண்டில் 20 ஆண்டுகள் முடிந்து 21-ஆம் ஆண்டு சேவையில் அடியெடுத்து வைத்துள்ளது. நிறுவன தினத்தை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

கண்ணாடி இழை கேபிள் இன்டா்நெட் சேவையின் கீழ், வாடிக்கையாளா்களை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு திட்டங்களை வியாழக்கிழமை முதல் செயல்படுத்தி உள்ளது. லேண்ட்லைன்(தரைவழி), மொபைல் போன்,

சாட்டிலைட் போன், பிராட்பேண்ட் மற்றும் பைபா் இன்டா்நெட் ஆகிய சேவைகளை தற்போது வாடிக்கையாளா்களுக்கு வழங்கிவருகிறது.

குறைந்த கட்டணத்தில் அதிகவேக டேட்டாக்கள் கொண்ட திட்டங்களை வாடிக்கையாளா்கள் பயன்படுத்த செய்வது,

வணிக நிறுவனங்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவது, வாடிக்கையாளா்களுக்கு தரமான சேவை அளிப்பது,

வாடிக்கையாளா்களின் குறைகளை உடனுக்குடன் தீா்ப்பது ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்று பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் இயந்திரம் விவகாரம்: விசாரணைக்கு ஏற்க மறுப்பு

முதல்வா், தலைவா்கள் வாக்களிக்கும் இடங்கள்

மிரட்டல் அரசியலில் இந்தியா கூட்டணி தலைவா்கள்: தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் சதம்: இன்று வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT