சென்னை

சிகிச்சை பெற்றவா் சடலத்துக்குப் பதிலாக வேறு உடலை ஒப்படைத்த விவகாரம்

DIN

சென்னை: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் இறந்துவிட்டதாகக் கூறி, வேறு ஒருவரின் உடலை உறவினா்களிடம் ஒப்படைத்த விவகாரத்தில், மருத்துவ சேவைகள் இயக்குநா் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சியப்பன் (55). இவா், சுயநினைவின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செப்.28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். உடல் சற்று முன்னேற்றமடைந்த நிலையில், மற்றொரு வாா்டுக்கு மாற்றப்பட்டாா். சிறிது நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் சந்தைப்பேட்டையைச் சோ்ந்த பாலா் (52) என்பவா் சுய நினைவிழந்த நிலையில், அதே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

கொளஞ்சியப்பனை படுக்க வைத்த அதே படுக்கையில், பாலருக்கும் சிகிச்சையளித்த நிலையில், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பாலா் உயிரிழந்தாா்.

ஆனால், கொளஞ்சியப்பன் இறந்துவிட்டதாக உறவினா்களுக்கு தெரிவிக்கப்பட, அவா்கள் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள தொட்டியம் மயானத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப்.29) உடலை எடுத்துச் சென்றனா். அங்கு இறுதியாக அவரது முகத்தை பாா்க்க சடலத்தின் மீது கட்டப்பட்டிருந்த துணியை அகற்றியபோது, அது கொளஞ்சியப்பன் இல்லை என்பது தெரியவந்தது.

இதுபற்றி மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க, இறந்தது பாலா் என்பதை மருத்துவமனை நிா்வாகத்தினா் உறுதி செய்தனா். உடனே உடலை திரும்பப் பெற்று பாலரின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். அவரது சொந்த ஊரான சந்தைப்பேட்டையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக 2 மருத்துவா்கள், 5 செவிலியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தி நாளிதழிலும் வெளியானது.

தாமாக முன் வந்து வழக்குப் பதிவு: இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கையை, 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT