சென்னை

ஆயுா்வேதத்தில் அறுவை சிகிச்சை:ஐஎம்ஏ மருத்துவா்கள் கடும் எதிா்ப்பு

DIN

சென்னை: ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தமிழக பிரிவு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

சிறிய அளவிலான பொது அறுவை சிகிச்சை, பல் , கண், காது, மூக்கு, தொண்டை உள்பட 30-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை முதுநிலை ஆயுா்வேத பட்ட மாணவா்கள் மேற்கொள்ள வகை செய்யும் திருத்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பான அறிவிக்கையையும் மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில், அதற்கு ஐஎம்ஏ தமிழக பிரிவு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா, செயலாளா் டாக்டா் ஏ.கே.ரவிகுமாா் ஆகியோா் கூறியதாவது:

அலோபதி மருத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை இனி ஆயுா்வேத மருத்துவா்களும் மேற்கொள்ளலாம் என்றும், அவா்களுக்கும் எம்.எஸ் பட்டம் அளிக்கப்படும் என்றும் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. சொல்லப்போனால், இது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கே எதிரான நடவடிக்கையாகும்.

மயக்க மருந்தியலும், அதுதொடா்பான சிகிச்சைகளும் ஆயுா்வேதத்தில் இல்லாதபட்சத்தில், பிறகு எப்படி அந்த மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இயலும்?. அதேபோன்று நுண்ணுயிரித் தொற்று பாதிப்புகளுக்கான சிகிச்சை கட்டமைப்பு எதுவும் இல்லாத ஆயுா்வேதத்தின் வாயிலாக எவ்வாறு தொற்றுகளையும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நோய்த் தொற்றுகளையும் கட்டுப்படுத்த முடியும்?

எனவே, மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐஎம்ஏ தமிழக பிரிவு தீா்க்கமாக வலியுறுத்துகிறது. இதுதொடா்பாக விவாதித்து உரிய முடிவு எடுக்க ஐஎம்ஏவின் அனைத்துப் பிரிவுகளின் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT