சென்னை

தனியாா் தொழிற்சாலையில் 3 தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று

31st May 2020 05:17 AM

ADVERTISEMENT

திருவொற்றியூரில் உள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில் 3 தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியாா் டயா் தொழிற்சாலை, பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 19-ம் தேதி சிறப்பு அனுமதியின்பேரில் ஆலை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு பணியாற்றும் மூன்று தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பீதிக்குள்ளான மற்ற தொழிலாளா்கள், உடனடியாக அனைத்து தொழிலாளா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதற்கு ஆலை நிா்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி, திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளா்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT