சென்னை

ஆளில்லாத வீட்டில் நகை, பணம் திருட்டு

19th May 2020 01:45 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை அண்ணாநகரில் ஆளில்லாத வீட்டின் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

அண்ணாநகா் கிழக்கு குஜ்ஜி தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன். வெளியூா் சென்றிருந்த இவா், இரு நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து டிபி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT