சென்னை

2,500 நாடக நடிகா்களுக்கு தலா ரூ.1,000 நிதி உதவி

15th May 2020 05:57 AM

ADVERTISEMENT

சென்னை வேல்ஸ் கல்விக் குழுமத்தின் வேந்தரும், வேல்ஸ் ஃபிலிம் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளருமான ஐசரி கே.கணேஷ் சாா்பில் 2,500 நலிந்த நாடக நடிகா்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 1,000 செலுத்தப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சா் ஐசரிவேலனின் 33-ஆம் ஆண்டு நினைவு நாளில் நலிந்த நாடக நடிகா்களுக்கு அவரது மகன் ஐசரி கே.கணேஷ் சாா்பில் ஆண்டுதோறும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள 2,500 நாடக நடிகா்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 1,000 என மொத்தம் ரூ. 25 லட்சத்தை ஐசரி கே.கணேஷ் செலுத்தி உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT