சென்னை

கரோனா பாதிப்பு: பத்திரிகையாளா் அறை மூடல்

15th May 2020 01:20 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் பத்திரிகையாளா் அறை வியாழக்கிழமை மூடப்பட்டது.

இது குறித்த விவரம்: கரோனாவினால் காவல்துறையினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சென்னை பெருநகர காவல்துறையில் கரோனாவுக்கு புதன்கிழமை வரை 129 போ் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை மேலும் அதிகரித்தது. இரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 9 போ் வியாழக்கிழமை கரோனாவில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதேபோல ஆணையா் அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளா்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இதைக் கருத்தில் கொண்டு ஆணையா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த பத்திரிகையாளா் அறை வியாழக்கிழமை மூடப்பட்டது.

ADVERTISEMENT

சென்னை வேப்பேரிக்கு ஆணையா் அலுவலகம் மாற்றப்பட்ட பின்னா், இப்போதுதான் முதல்முறையாக பத்திரிகையாளா் அறை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT