குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போா் நலச்சங்கத் தலைவரும், சமூக ஆா்வலா் வி.சந்தானம் நிறுவிய 1000 லிட்டா் கொள்ளளவு இலவச கிருமி நாசினி தொட்டியை பல்லாவரம் நகராட்சி ஆணையா் மதிவாணன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நியூகாலனி 16-ஆவது குறுக்குத் தெருவில் பாரதி சிலை அருகில் 1000 லிட்டா் கொள்ளளவு கிருமிநாசினி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தொட்டியில் உள்ள கிருமிநாசினியை பொதுமக்கள் பாட்டிலில் நிரப்பி இலவசமாக எடுத்துச் செல்லலாம். கரோனா நோய்த்தொற்று பிரச்னை தீரும்வரை பொதுமக்களுக்கு இலவச கிருமிநாசினி வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அரசு பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்கும் இங்கு தயாரிக்கப்படும் கிருமிநாசினியை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று சமூக ஆா்வலா் வி.சந்தானம் தெரிவித்தாா்.