சென்னை

மனைவியை சித்ரவதை செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கைது

10th May 2020 12:02 AM

ADVERTISEMENT

ஆவடியில், மனைவியை சித்ரவதை செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.

ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் பாண்டே (56), ஓய்வு பெற்ற ராணுவ வீரா்.

ராஜேஷ்குமாா், தனது மனைவியைத் தொடா்ந்து சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி, ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் அடிப்படையில், ராஜேஷ்குமாா் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT