சென்னை

கரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு முழு ஆதரவு அளிக்க இந்திய  மருத்துவ சங்கம் முடிவு

23rd Mar 2020 02:33 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை முழுமையாக ஆதரிக்க  இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது.
 இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர், செயலர்,  பொது சுகாதாரத் துறை இயக்குநர்,   இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர், பிற அரசு  அதிகாரிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ சங்க உறுப்பினர்களுடன் காணொலி மூலம்   விரிவான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது. இதையடுத்து  கரோனா வைரûஸ கட்டுப்படுத்துவதற்கான சிறப்புக் குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க மருத்துவர்கள் முன் வர வேண்டும்.  இந்திய மருத்துவ சங்கத்துடன்  கைகோர்க்க அனைத்து சிறப்பு மருத்துவ சங்கங்களும் முன் வர வேண்டும்.   சந்தேகத்துக்கிடமான நோயாளிகளைக் கையாள தனியார் மருத்துவமனைகளின் 50 சதவீத படுக்கை வசதியை கரோனா நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு முடிவுகளும் கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன. 
குறிப்பாக சிறப்பு பணிக்குழுவில் தன்னார்வலர்கள் இணைய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
இதில் இணைய 98422 22404, 98427 17277 ஆகிய செல்லிடப்பேசி எண்களையோ மின்னஞ்சல் முகவரியையோ அல்லது  இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT