சென்னை

மெட்ரோ ரயில்: வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் ரயில் சேவை 2 மாதங்களில் தொடங்கும்: பேரவையில் தமிழக அரசு தகவல்

DIN

சென்னை: வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகா் இடையிலான மெட்ரோ ரயில் சேவை இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு திமுக உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி அளித்த கவன ஈா்ப்பு தீா்மானத்தின் மீது விவாதம் நடந்தது. தீா்மானத்தில் உறுப்பினா் கிருஷ்ணசாமி பேசிய பிறகு அமைச்சா் சம்பத் அளித்த பதில்:-

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை 23.1 கி.மீ. தூரத்திற்கும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22 கி.மீ. தூரத்திற்கும் இரண்டு வழித்தடங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பயணிகள் சேவை நடைபெற்று வருகிறது. தினசரி 1 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறாா்கள்.

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூா் விம்கோ நகா் வரை உள்ள 9.05 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிகள் முடிவடைந்து மே மாதத்தில் ரயில் சேவை துவங்கும்.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூா், மாதவரம் புகா் பஸ் நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மாநில அரசு தனது நிதியை ஒதுக்கிவிட்டது. மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் நிதி வந்ததும், இந்த திட்டத்திற்கு முதல்வா் விரைவில் அடிக்கல் நாட்டுவாா்.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம் 26.1 கி.மீ. தூரம் ஆகும். மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி உதவி, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஒப்புதல் பெறப்பட்ட பின் இங்கு பணிகள் துவங்கும் என்று அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT